தியானம்
சகல சாத்திரங்களையும் அறிந்த சனகாதி முனிவர்கள் சிவபெருமானிடம், வேறு ஏதேனும் கற்க இருந்தால் தங்களுக்கு சொல்லியருள வேண்டினார்கள்.
சிவபெருமான், ஞானகுருவாக தட்சிணாமூர்த்தி வடிவில், மரத்தடியில் அமர்ந்து, சின்முத்திரையை காட்டி, தியானம் செய்யுமாறு மெளன நிலையில் புலம்படுத்தினாராம்.
அதுபோல, நம் அன்னையிடம் ஆன்மிகம் பற்றிய உண்மையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு அன்பர் அடிக்கடி நிறைய சந்தேகங்களை அம்மாவிடம் கேட்டு வந்தார்.
அன்னை அவருக்கு சொன்னாள், "மகனே! நீ தியானத்தில் உட்கார்ந்து பழகு. உன்னுடைய சந்தேகங்கள் அனைத்திற்கும் உன் உள்ளிருந்தே பதில் கொடுத்து தெரிவிக்கின்றேன்!" என்றாள்.
இதிலிருந்து தெரிவது என்ன? சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் உதவும். அதையும் தாண்டி அறிந்து கொள்ள, தியானத்தால்தான் முடியும்.
ஓம் மோனத்தேயொளி காட்டுவை போற்றி ஓம்!
ஓம் மோன சுகத்தை அருள்வாய் போற்றி ஓம்.
குருவடி சரணம்! திருவடி சரணம்! ஓம் சரணம்! ஒம் சக்தி!
Comments