
உலகெங்கிலும், புத்தர், ஜெயின மகாவீரர், தேவர்கள், தேவியர்கள் தாமரை பீடத்தில் அமர்ந்திருப்பதை காண்கிறோம்.

மேல்மருவத்தூரிலும் கருவறை அம்மன் அமர்ந்திருக்கும் பீடம் தாமரை மலர்.
இக்கருத்தை அறிய திருக்குறள் ஒன்றை பார்ப்போம்.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்" என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது இதய தாமரையில் வசிக்கும் கடவுளின் பாதங்களில் சரணடைப்பவர்கள் பேரின்பம் அடைகிறார்கள்.
"ஓம் கஞ்சமலர் உறைபவளே போற்றி ஓம்" என்பது மந்திரம்.

கஞ்சமலர், அதாவது தாமரை பீடத்தில், கருவறையிலும், நம் இதயத்திலும் அமர்ந்திருக்கும் அம்மாவை வணங்குவோம்!
குருவடி சரணம்! திருவடி சரணம்! ஓம் சக்தி!
Comments