ஆச்சார்ய அபிடேகம்
மகனே! மகனை மகானாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது அருளாணை.
ஆன்ம பரிபக்குவம் பெற்ற ஒருவரை குரு ஸ்தானத்திற்கு உயர்த்த வேண்டிச் செய்யப்படும் அபிடகமே ஆச்சாரிய அபிடேகம்.
ஏப்ரல் 14, 1979ல் விடிகாலையில் பல சக்கரங்களும் படிகளும் அமைத்து அவைமேல் முக்கோணத்தில் இராஜராஜேஸ்வரி கலசம் வைக்கப்பட்டது.

பல புண்ணிய ஸ்தலங்களிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.
1008 மந்திரங்கள் கூறி, 17 கலசங்கள், 17 மகளிரால் வழிபாடு நடந்தது.

கருவறை அன்னை போல, அடிகளார், வலது காலை மடக்கி, இடது காலை ஊன்றி, இடக்கையில் சின் முத்திரை காட்டி, வலக்கையில் தாமரை மொட்டின் அடையாளம் காட்டி அமர்ந்தார்.

அன்னை தேர்ந்தெடுத்த தமிழ் கடல், பன்மொழிப் புலவர், தா. பொ. மீனாட்சி சுந்தரனார் மூலம் அன்னை ஆச்சார்ய பீட அபிடேகத்தை புன்னகை மலர்ந்து ஏற்று கொண்டார்கள்.
குருவடி சரணம்! திருவடி சரணம்! ஓம் சக்தி!
Comments