ஓம் சக்தி
108 எண்ணின் மகிமை
சித்தவனமான இ்ன்றைய மேல்மருவத்தூர் அன்னை எழுந்தருளிய 108 ஸ்தலங்களில் ஒன்றாகும்.
108 என்ற எண்ணை எண்ணற்ற வகையில் மையமாக வைத்து வழிபடுகிறோம்.
அத்தகைய முக்கியமான 108 என்ற எண்ணின் மகத்துவம் யாது?
"ஓம் அண்டமும் பிண்டமும் அமைத்தாய் போற்றி ஓம்" என்ற மந்திரம் படி ஆதிபராசக்தி வெளியில் இருக்கும் அண்டத்தையும் நம் உடம்பான பிண்டத்தையும் படைத்தார்கள்.
அண்டத்தில் ஔி வீசும் சூரிய பகவானாக அன்னையும், நம் பிண்டத்தின் உள்ளே ஆன்ம ஜோதியாக ஔி வீசும் அன்னையும் ஒன்றே என்ற ஞானத்தை உணர்த்துவதுதான் 108 எண்ணின் மகிமை.
சாத்திரங்களும், அறிவு நூல்களும் கூறுகின்றன; பூமியிலிருந்து சூரியனை அடையும் தொலைவு, 108 மடங்கு சூரியனின் பிரம்மாண்டமான விட்டம், diameter.
நம் உள்ளே ஔி வீசும் அன்னையை அடைய 108 சிவப்பு மணிகளை கோர்த்த சக்தி மாலை அணிந்தும், பல பல 108 மந்திரங்களை ஜபித்து வழிபடுவோம்.
Comments